Showing posts with label என்னுடைய சிந்தனைகள். Show all posts
Showing posts with label என்னுடைய சிந்தனைகள். Show all posts
Saturday, January 12, 2013
வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்
Labels:
என்னுடைய சிந்தனைகள்
Sunday, September 9, 2012
தமிழக முதல்வரை கேவலமாக சித்தரித்த சிங்களம் நாளிதழ்: கடுமையான கண்டனம்
சிங்களம் நாளிதழ் நம்முடைய முதல்வரை முகம் சுளிக்கும் வகையில் கேலி சித்திரம் வெளியிட்டு இருப்பதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
நாம் அனைவரும் தமிழராக இந்தியராக ஒரு மித்து செயல் பட வேண்டும். பெண்களை கேவலபடுத்தும் இது போன்ற செயல்களை ஒரு போதும் நாம் அனுமதிக்க கூடாது.
முதல்வரை மட்டுமல்ல வேற எந்த பெண்ணையும் இப்படி கேவலமாக சித்தரித்தாலும் அது கண்டிக்கதக்கதே .... ஒரு மாநிலத்தின் முதல்வரான ஒருவருக்கே இந்த நிலை எனில் சிங்களன் கையில் சிக்கிய தமிழ் பெண்களையும்...போரில் சிக்கிய போராளி தமிழச்சிகளின் நிலையை எண்ணி பாருங்கள்....
சிங்கள நாளேட்டில் தமிழக முதல்வர் குறித்த கேவலமான கேலிசித்திரம், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நாட்டில் கண்டன கூட்டமோ, மாநாடோ, ஆர்பட்டமோ, கடிதம் எழுதுதலோ, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தன் இனத்தவரையே கைது செய்தலோ நடை பெறவில்லை.
இதற்கு நாம் தமிழர் மற்றும் இந்தியர் என்ற உணர்வில் இதை கடுமையாக கண்டிக்க வேண்டும். இதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
பெண்களை இழிவு படுத்தும் இந்த செயலுக்கு ஆதிமுக தொண்டர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழர் என்ற முறையில் நாம் அனைவரும் கட்சி பாகு பாடின்றி கண்டனம் தெரிவிப்போம்.........
அந்த கேவலமான சித்திரத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்ற காரணத்தினால் லிங்க் இணைக்கப்படவில்லை
அந்த கேவலமான சித்திரத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்ற காரணத்தினால் லிங்க் இணைக்கப்படவில்லை
Labels:
என்னுடைய சிந்தனைகள்
Tuesday, September 4, 2012
ஆசிரியர் தினம் பற்றிய சில தகவல்கள் - ஆசிரியர் தினம் எப்படி வந்தது?
டாக்டர்.ராதா கிருஷ்ணன்
டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினத்தை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் ஆனால் அது எப்படி வந்தது என்று யோசித்து உண்டா?
நிறைய நண்பர்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் இருந்தாலும் எனக்கு தெரிந்த தகவலை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.
ஆசிரியர் தினம் என்பது மாணவர்களும் ஆசிரியர்களும் ஆடி பாடி கொண்டாடி மகிழ்கின்ற நாள். மாணவர்கள் ஆசிரியர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் ஆசிரியர்களை மகிழ்விக்க பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஆசிரியர் தினம் எப்படி வந்தது?
சில மாணவர்கள் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தித்து உங்களுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் என்னுடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் நான் மிகவும் மகிழ்வேன் என்றார் அதானால் அவருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டபடுகிறது.
டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவருடைய பிறந்த தினம் 1962 செப்டெம்பர் 5 முதல் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த நாளில் தன்னுடைய ஆசிரியர் பணியை சிறப்பாக செய்ததை நினைத்து மனம் மகிழ்வர். மற்றும் சிறப்பான ஆசிரியர்கள் பாரட்டபடுவார்கள்.
ஆசிரியர் தின சிறப்பு கவிதை - ஆசிரியர்
******************************************************************
ஆசிரியர் தின சிறப்பு கவிதை - ஆசிரியர்
******************************************************************
Tags: ஆசிரியர் தினம், டாக்டர்.ராதா கிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினம் சிறப்பு செய்திகள், ஆசிரியர் தினம் வாழ்த்து, ஆசிரியர் பற்றிய செய்திகள்.
Labels:
என்னுடைய சிந்தனைகள்
Monday, September 3, 2012
டாக்டர்.ராதா கிருஷ்ணன் பற்றிய சில தகவல்கள்
நானும் ஆசிரியர் என்பதால் இப்பதிவை எழுதுவதில் பெருமிதம் அடைகிறேன். நம் அனைவருக்கும் டாக்டர்.ராதா கிருஷ்ணன் என்றால் நினைவுக்கு வருவது அவர் ஒரு சிறந்த ஆசிரியர், முன்னால் குடியரசு தலைவர், அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது இன்னும் பல..
டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் 1888 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். அவர் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் திருத்தணி ஊரில் பிறந்தார். தற்பொழுது இது தமிழ் நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.
டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் தத்துவம் பற்றி விரிவாக பயின்றார். அவருடைய கல்வி முடிந்ததும் Madras Presidency College கல்லூரியில் Department of Philosophyல் விரிவுரையாளராக ஆசிரியர் பணியை தொடங்கினார்.
தொடர்ந்து பல கல்லூரிகளில் ஆசிரியர் பணியை செம்மையாக செய்தவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர்.
டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் ஐந்து முறை நோபல் பரிசுக்காக தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.
டாக்டர்.ராதா கிருஷ்ணன் இந்தியாவின் துணை குடியரசு தலைவராக இருந்தார் (1952 -1962)
டாக்டர்.ராதா கிருஷ்ணன் இந்தியாவின் குடியரசு தலைவராக (13 May 1962 – 13 May 1967 ) இருந்தார்.
டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாப்படுகிறது. அவர் ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குகிறார். ஆசிரியர் பணியை மிகவும் சிறப்பாக செய்தவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள்.
Labels:
என்னுடைய சிந்தனைகள்
Tuesday, August 28, 2012
அதிர்ச்சியை தரும் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்.
கட்டிடம் கட்டுவதற்கு அடிப்படை சரியாக இருக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு கல்வி
என்பது ஒரு வீட்டுக்கு சமமாகும். அப்பேற்பட்ட கல்வி தரமானதாகவும் அதை கற்பிக்கும்
ஆசிரியர் சிறந்த ஒருவராக இருந்தால் மட்டுமே கல்வியின் தரமும் அதை கற்கும் மாணவரின்
தரமும் உயரும்.
ஆனால் அடிப்படையை, வாழ்க்கையின் அடிப்படையை நன்றாக கற்று தரக்கூடிய ஆசிரியரின்
நிலையை அண்மைய தகுதி தேர்வு முடிவுகள் பார்க்கும பொழுது அதிர்ச்சியாகவும்,
வேதனையாகவும் இருக்கிறது.
மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் தகுதியின்றி இருக்கலாமா? இப்பொழுது வெளி
வந்திருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை பார்க்கும் பொழுது அப்படி தான் தோன்றுகிறது. இது வரை வந்த
ஆசிரியர்களின் தகுதி கேள்விகுறியாய் நிற்கிறது.
ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தகுதி தேர்வில் ௦.5 சதவிகிதம் அளவுக்கு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதை பார்க்கும் பொழுது ஆசிரியர்
பயிற்சி பள்ளிகளும் கல்லூரிகளும் தரமாக இல்லை என்று தான் தோன்றுகிறது.
இப்பொழுதாவது அரசு கொண்டு வந்த தகுதி தேர்வால் நம்முடைய இளைய
தலைமுறையினர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
இளைய தலைமுறைக்கு சிறப்பான கல்வி வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த இந்த முடிவை
நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு தேர்வு எழுத நேரம் போதவில்லை, பாட திட்டத்தை தாண்டி கேள்வி
கேட்கிறார்கள் என்றெல்லாம் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வை குறை கூறுகிறார்கள் இது
முற்றிலும் தவறானது ஏன் என்றால் 2448 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் அவர்களை
போல் நாமும் கடுமையாக போராடி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்க வேண்டும்.
Labels:
என்னுடைய சிந்தனைகள்
Subscribe to:
Posts (Atom)
