Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, October 1, 2012

காதல் தோல்வி கவிதை: யாரையும் நேசிக்கவில்லை...



இப்பொழுதெல்லாம்
நான்
யோசிப்பதில்லை,
காரணம்
நான்

யாரையும்
நேசிக்கவில்லை...

அன்புடன்
ப.சுரேஷ்..

*******************************************************
Tags: தமிழ் கவிதைகள், காதல் கவிதைகள், லேட்டஸ்ட் தமிழ் கவிதைகள், காதல், தமிழ் கவிதைகள் தொகுப்பு 

Wednesday, September 26, 2012

காதல் கவிதை : காதல்


இந்த காதல்
என்னை
அழகாய் காட்டுகிறது..

இந்த காதல்

என்னை
தனிமை படுத்துகிறது...

இந்த காதல்
என்னை
சந்தோஷமாய் வைக்கிறது ..

இந்த காதல்
என் இதயத்தை
துடிக்க வைக்கிறது..

இந்த காதல்
என் கண்களை
திறந்து வைக்கிறது..

இந்த காதல்
என் நகங்களில்
பூப்பூக்க வைக்கிறது..

இந்த காதல்
என்னை
அழ வைக்கிறது..

இந்த காதல்
என்னை
அடிமை படுத்துகிறது..

இந்த காதல்
என்னை
தள்ளாட வைக்கிறது..

எல்லாவற்றிற்கும் மேல்,

இந்த காதல்
பிறப்பின் ரகசியத்தையும்,
இறப்பின் அர்த்தத்தையும்
புரிய வைக்கிறது...

காதலுடன்
ப.சுரேஷ்..

Saturday, September 22, 2012

காதல் கவிதை : காதல் தேவதை


எனக்கு காதல் செய்ய
ஒரு தேவதை வேண்டும்...
வரம் தரும்
தேவதை போல அல்ல,
என் வாழ்க்கையை தரும்
தேவதையை போல...


காதலுடன்
ப.சுரேஷ்..

தமிழ் கவிதை: காதல்மழை

divya nagesh unseen pics

அழகான மாலை நேரம்,
மழை பெய்வதற்கு
மேகங்கள்
தயாராகி கொண்டிருக்கிறது,
நீயோ குடையைத்தேட
ஆரம்பிக்கிறாய்,

விட்டுவிடு
கொஞ்சநேரம்
காதல்மழையில்
நான் நனைந்து வருகிறேன்..

காதலுடன்
ப.சுரேஷ்..

Tuesday, September 4, 2012

ஆசிரியர் தின சிறப்பு கவிதை - ஆசிரியர்



எழு பிறப்பையும் 
          ஏற்றம் பெற்றதாய் 
உழலும் நெஞ்சை 
          உறுதி உள்ளதாய் 
தழைக்கும் எண்ணம் 
          தனிச் சிறப்பாய் 
உழைக்கும் எண்ணத்தை 
          உள்ளத்தில் ஊட்டலாய் 
இழைந்த மனமாய்
என்றும் உள்ளதாய் - எம் உள்ளத்திற்கும் 
நுழைந்த கடவுளே..!
நும் வழி காட்டலால் 
பிழைத்தேன் உலகில்
பரவச ஆனந்தத்தில் 
திளைத்தேன் மனதினில் 

கற்ற கல்வியை 
கருத்துடன் நல்கச்செய்தாய் 
பெற்ற அறிவை 
பேணி வளர்க்க செய்தாய் 
நிற்றல் என்பதை
நினைவில் பதித்தாய் (வாழ்வில்)
நற்செயல் அனைத்தையும்
நலமுறக் கற்ப்பித்தாய் - உன்னால் 

வாழ்வைக் கற்றேன்
வளம்பல பெற்றேன் 
ஊழ்வினை தந்த உன்னை
உலகம் உள்ளவரை
போற்றும் என் உள்ளம் - நன்றி
சாற்றும் என் உள்ளம்.

மலர் ஒளி 


 Tags: ஆசிரியர் தினம், ஆசிரியர் தின வாழ்த்து, ஆசிரியர் தின கவிதைகள், ஆசிரியர் தமிழ் கவிதைகள், புது கவிதைகள், வாழ்த்து கவிதைகள், ஆசிரியர் வாழ்த்து கவிதைகள்

Friday, August 31, 2012

கவிதை - கிளித்தெறியும் காதல்


எனக்கு
காதலும் கவிதையும்
பிடித்த ஒன்று..

உனக்கு
என் காதலையும்

கவிதையும்
கிளித்தெரிவதுதான்
பிடித்த ஒன்று...

அன்புடன்
ப.சுரேஷ்..

Thursday, August 16, 2012

தமிழ் கவிதை : முதல் பாராட்டு


எங்கிருந்தாலும் வந்துவிடுகிறது
என் கவிதைக்கான
முதல் பாராட்டு
உன்னிடத்திலிருந்து..

அன்புடன்
ப,சுரேஷ்..

தமிழ் கவிதை :காதல் கற்பழிக்க படுகிறது

 

காதல் கற்பழிக்க படுகிறது
காதலர்களால்..

காதலியை ஏமாற்றிய காதலன்,
கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி...
தினம்தோறும் பார்க்கிறேன்

செய்திகளிலும் செவிகளிலும்...

காதல் கற்பழிக்க படுகிறது
காதலர்களால்..

அன்புடன்
ப.சுரேஷ்...

தமிழ் கவிதை: பாவம் என் தலையணை..

 

தேர்வறையின்
இறுதி நேரத்தை போல
வேகமாக செயல் படுகிறேன்...
உன் கைகோர்ப்பதில்,
உன்னை முத்தமிடுவதில்,
உன்னை கட்டி பிடிப்பதில்..

பாவம் என் தலையணை..

அன்புடன்
ப.சுரேஷ்..

தமிழ் கவிதை: என் காதல்...



நேரக்குறைவால்
எழுத முடியாத
விடைகள் போல,
என் தைரிய குறைவால்
சொல்ல முடியாமல் போனது
என் காதல்...

அன்புடன்
ப.சுரேஷ்..

தமிழ் கவிதை: தொட்டுவிடும் தூரம்தான்...



நட்சத்திரங்கள் சேர்ந்து
சூரியனை தேடும் நாடகம் இது.. 

மின்மினி பூச்சிகள் சேர்ந்து
நிலவினை அடையும் தேடல் இது...

தோல்வி
உன் வெற்றிக்கான வேள்வி, 

வெற்றி
உன் உழைப்பிற்கான பரிசு.. 

பரிசு
உன் முயற்சியின் அடையாளம், 

முயற்சி
அது போர்ப்பயிற்சி,

மாதா பிதா குரு தெய்வம்
தோல்வி வெற்றி முயற்சி பரிசு..

வாழ்க்கை
பிறப்பில் ஆரம்பித்து
இறப்பில் முடியும்
ஒரு வட்டம்..

உன் வாழ்க்கை
தோல்வியில் ஆரம்பித்தால்
சந்தோசப்படு,
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று..
வெற்றியில் ஆரம்பித்தால்
கவனமாய் இரு
இங்கு கள்வர்கள் அதிகம்..

நீ
ஆரம்பத்தில் கள்வனை இரு
பிறகு கவனமாய் இரு...

உன் காலுக்கு செருப்பு
நீ பெரும் தோல்விகள்..
உன் தலைக்கு கிரீடம்
உன் முதல் தோல்வி...

பெருமைகொள்
தோற்றுப்போனவன் என்றல்ல,
மீண்டு வந்தவன் என்று..

என் இலக்கு
உன்னை முடுக்கிவிப்பது,
உன் இலக்கு
அதனை முடித்து வைப்பது..
இங்கே இலக்கினை
நீ நிர்ணயித்துவிடு ,
இல்லை
அது உன்னை நிராகரித்துவிடும்..

உனக்குள் கிழிக்கப்பட்ட
உன் எல்லையைத்தாண்டு,
உன் இலக்கு உன்னருகி வரும்...

உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு,
ஓடபோவது நீதான்..

வெயிலில் ஓடினால்
மலையை தேடி ஓடு,
மலையில் ஓடினால்
வெயிலைத்தேடி ஓடு..
ஆனால்
எப்பொழுதும்
உன் இலக்கைநோக்கியே ஓடு..

சிறகில்லா பறவை
பறவையாகாது,
இலக்கில்லா மனிதம்
மனிதனாகாது...
நீ மனிதனாயிரு

நீ பெரும் தோல்விகள்
வானில் பறப்பதற்கு
உனக்கு நீயே கட்டிக்கொள்ளும் சிறகுகள்..
உன் வாயிற்று பசிக்கு
நீயே விதைத்துகொள்ளும்
விதைநெல்..

தெரிந்துகொள்
உன் பசிக்கு
நீதான் உண்ணவேண்டும்,
உன் இலக்கிற்கு
நீதான் ஓடவேண்டும்..

உலகம் நாடக மேடையல்ல,
இங்கு வலிகள் உண்டு
வலிகள் மட்டுமே உண்டு..

எங்கே
என் இலக்கு முடிகிறதோ
அங்கே
உன் இலக்கு ஆரம்பம்..

இங்கு இலக்குகள் நிர்ணயிக்க படுவதில்லை
ஏற்கனவே நிர்ணயித்ததை இலக்கினை
காயடிப்பதே(முறியடிப்பதே) இலக்காக அமைகிறது..

என்னைப்போல் ஓடாதே
என்னைவிட வேகமாய் ஓடு,
உனக்கான இலக்கு
உன்னை விட வேகமாய்
ஓடி கொண்டிருகிறது..

அதோ,
உன் இலக்கு
தொட்டுவிடும் தூரம்தான்,
விடாதே துரத்து..

மீண்டும் ஒருமுறை,
என் இலக்கு
உன்னை முடுக்கிவிப்பது,
உன் இலக்கு
அதனை முடித்து வைப்பது..

இதோ என் இலக்கு
தொட்டுவிடும் தூரம்தான்,
அது
உங்கள் மனது...

தொட்டுவிட்டேன்
என்ற பெருமிதத்துடன்...

ப.சுரேஷ்..
ஆத்தூர் 

Tuesday, August 14, 2012

காதல் கவிதை - சொல்லிவிட எண்ணி




சொல்லிவிட எண்ணி பல நாள் அருகில் வருவேன் 
உந்தன் பார்வை பார்த்ததும் 
அது மட்டும் போதும் என நினைத்து விலகி விடுவேன்
என் மனதில் உள்ளது தெரிந்தும் விளையாடும் பெண்ணே, 
நீ ஏற்று கொள்வாய் என்றே தொடர்கிறேன் உன் நிழலாய் 
தொடர்வேன் என்றும்

*********************************************************

Thursday, August 9, 2012

பூமியை வாழ விடு !


காகிதங்களில்

காவியங்கள்

எழுந்தாலும்

அவை

கல்லறை

சென்ற

மரங்களின் தடங்களே !

இயற்கை அன்னையின்

இனிய வரங்கள்

இன்றியமையாத மரங்கள் !

இதை மனதில் கொண்டே

மரம் வெட்டுதலை

விட்டிடுவோம்

புதிய மரக்கன்றுகளை நட்டிடுவோம் !

இணையில்ல பூமியை

வாழ விடுவோம் !

**********************************************************

இது தான் காதலா? தமிழ் கவிதை


ஒரு பகல் பொழுதில்

உன்னை கண்டேன் பெண்ணே....

அன்றே தொலைத்து விட்டேன்

என் இரவுத் தூக்கத்தை !

காதல் விழிப்புணர்வு என்பது

இது தானோ ....!

***********************************************************

Sunday, June 3, 2012

ச்சும்மா...! - அழகு கவிதை


இப்படி நீ கிள்ளி
காயப்படுத்துவாய்
என்று தெரிந்திருந்தால்
நான் தோன்றியிருக்கவே
மாட்டேன்,
உன் அழகான முகத்தில்
பருக்களாய்!

===============================================

Tags: காதல் கவிதைகள், புது கைவிதைகள், கவிதை, kavithaikal, tamil kavithaikal, kavithaikal in tamil font, latest tamil kavithaikal,



Related Posts Plugin for WordPress, Blogger...