Showing posts with label விவேகானந்தர் பொன்மொழிகள். Show all posts
Showing posts with label விவேகானந்தர் பொன்மொழிகள். Show all posts

Monday, August 27, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 5 - நம்பிக்கை




நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருகும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதி மோட்சமில்லை


------------------------------------------------------------------------------------

Thursday, August 23, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 4 - தன்னம்பிக்கை



தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்தவுடனே அழிவு வருகிறது.

Wednesday, August 22, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 3 - இக்காலத்து நாத்திகன்



எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ

அவனே நாத்திகன்.

பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லதவனைத்தான்

நாத்திகன் என்று குறிப்பிட்டன.

புதிய மதம் தன்னம்பிக்கை இல்லதவனைதான்

நாத்திகன் என்று சொல்லுகிறது.

Tuesday, August 21, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 2 - வலிமை



நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால்

பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய்.

நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

Saturday, August 18, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 1 - பணம்



மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்?

பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது

எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?

நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும்

ஒன்றாக இருக்கும்படி செய்தால், 

அதைச் செய்ய உன்னால் இயலுமானால்,

பணம் தண்ணீரை போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...