Wednesday, December 19, 2012

அறிந்ததும் அறியாததும்: உப்புஅதிகம் சாப்பிடும்பழக்கத்தை எப்படிதவிர்ப்பது?

உப்புஅதிகம் சாப்பிடும்பழக்கத்தை எப்படிதவிர்ப்பது?
உப்புஅதிகம் சாப்பிடும்பழக்கத்தை எப்படிதவிர்ப்பது?

பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும். இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


அதிலும் நீண்ட நாட்கள் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருந்தால், உதட்டில் வெடிப்பு, அதனால் இரத்தம் வடிதல், மயக்கம் போன்றவை சில அறிகுறிகளாகும். இந்த சோடியத்தின் அளவு உடலில் நீடித்தால், சில சமயம் மரணத்தில் கூட முடிந்துவிடும். எனவே, உணவு முறையில் உப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்போது எப்படி உப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது என்று பார்ப்போமா!!!


1. சமைத்த உணவின் இயற்கையான சுவையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். கரண்டியை எடுக்கும் முன்பே உப்புப் பெட்டியை எடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால், உப்பில்லாமல் ஒரு உணவின் இயற்கையான ருசியை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உப்பில்லாத உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும். சுவையில்லை, சப்பென்றிருக்கிறது என்னும் அலுப்பு மனதில் தோன்றினாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உணவில் இயற்கையான சுவையை தெரிந்து கொள்ளலாம். இதனால் உப்பு வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிட முடியும்.


2. கடைகளில் விற்கும் விருப்பமான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் போது, அதன் விபரப்பட்டியலில் உள்ள சோடியத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். மேலும் இதனால் இனிமேல் இந்த உணவுப் பொருட்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


3. உப்பின் அளவைக் குறைக்க நினைக்கும் போது சமையலில் உப்பின் அளவானது அதிகரிக்காமல் இருக்க, சமைக்கும் போதே உப்பை அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால், பாதி உப்பு போடுவது நல்லது. மிகவும் குறைவாக இருந்தால், சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் சமைக்கும் போது போட்ட உப்பின் அளவே சரியானதாக இருக்கும்.


4. உப்புக்கு பதிலாக இதர சீசனிங் முறைகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது ஒரு மிகச்சிறந்தது. ஏனெனில் தற்போது பலவிதமான சுவையூட்டும் உணவுப் பொருட்கள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே உப்பை தவிர்க்கலாம். அவை: மூலிகை வகைகள், மசாலா வகைகள், எலுமிச்சை, பூண்டு, வெஜிடேபிள் உப்பு, சாஸ் போன்றவை.


5. பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். புதிதான இறைச்சி, புதிதான நன்னீர் மீன்வகைகள் ஆகியவற்றில் உப்புக் குறைவான அளவில் உள்ளன. ஆனால் ரெஸ்டாரெண்ட் உணவுகளான சூப் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுப்பண்டங்கள் எல்லாவற்றிலும் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. மேலும் எப்போது எந்த பொருளை வாங்கினாலும், அதில் உள்ள லேபிளில் குறிப்பிட்டிருக்கும் சோடியத்தின் அளவைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


6. உப்பு தூவிய தின்பண்டங்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பை துடைத்து விட்டு சாப்பிட வேண்டும். அதிலும் பிஸ்கட்டுகளில் ‘அன்சால்ட்டட் டாப்' வகைகளை விட ‘சால்ட்டட் டாப்' வகைகளே மேல். ஏனெனில் அன்சால்ட்டட் டாப் வகைகளில், அதன் உள்ளேயே உப்பின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சால்ட்டட் டாப் வகைகளின் மேல் மட்டும் தான் உப்பு தடவப்பட்டிருக்கும். ஆகவே அவற்றை துடைத்துவிட்டு சாப்பிடலாம். அதனுள்ளே சுவையைத் தரும் உப்பு இல்லையென்றாலும், மேலே கொஞ்சம் ஒட்டியிருக்கும் உப்பே போதுமானது.


7. ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கவே முடியாது. எனவே வெளி சாப்பாட்டை விட, வீட்டு சாப்பாட்டினால், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கலாம்.

Tuesday, December 11, 2012

குறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்கள்



அறிவியலின் முன்னேற்றத்தைப் பார்த்தால் வியப்படயத்தான் வைக்கிறது. பெல்ஜியம் நகரிலுள்ள க்ஹென்ட் என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்த குறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்களைக் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த கான்டாக்ட் லென்ஸ்கள் வட்டவடிவிலான LCD அமைப்பிலிருக்கும். இந்த LCD அமைப்பானது புகைப்படங்களைக்கூட இணைப்பில்லாக் கருவியின் மூலம் திரயிடக்கூடியது.

இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால் அதில் சில புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.

“தொழில்நுட்பம் நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டும், மெருகேரிக்கொண்டும் வரும் நிலையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம்” என ஹெர்பர்ட் டி ஸ்மெட் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது, இந்தத் தொழில்நுட்பம் தரத்தை முன்னிறுத்துகிறது. அதாவது, கணிப்பொறித் திரையில் பார்ப்பதைப் போன்று இருக்கவேண்டுமென்பதே. கண்டிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் இதை உண்மையாக்குகிறது என்பதே சொல்லலாம். எப்படியெனில், இதிலும் இணைப்பில்லா கருவிவரை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம்.
இதற்கான வர்த்தக அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Karbonn ஸ்மார்ட் Tab 7 டொர்னாடோ விவரக்குறிப்புகள் மற்றும் விலை இந்தியாவில்






Karbonn ஸ்மார்ட் Tab 7 டொர்னாடோ விவரக்குறிப்புகள்:


  • 1.2 GHz Cortex A9 பிராசசர்
  • அண்ட்ராய்டு v4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஓஎஸ்
  • 7.0 "அங்குல TFT LCD கொள்ளளவு தொடுதிரை காட்சி
  • திரை தெளிவுத்திறன்: 800 x 480 பிக்சல்கள்
  • வீடியோ காலிங் 2 மெகாபிக்சல் முன்னணி கேமரா
  • மைக்ரோ அட்டை துளை கொண்ட வரை 32 ஜிபி வரை
  • Multiformat வீடியோ / ஆடியோ பிளேயர்
  • எஃப்எம் ரேடியோ
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • Wi-Fi
  • 3G USB டாங்கிள்
  • USB v2.0
  • 3700 mAh லி அயன் பேட்டரி

Karbonn ஸ்மார்ட் Tab 7 டொர்னாடோ விலை: ரூ .5, 500

Read This article in english

HTC M7 மொபைல் அம்சங்கள், விவரக்குறிப்புகள் & விலை இந்தியாவில்






HTC M7 அம்சங்கள் & விவரக்குறிப்புகள்:
  • Qualcom ஸ்னாப்ட்ராகன் S4, ப்ரோ Quad-core பிராசசர்
  • 5 அங்குல HD கொள்ளளவு தொடுதிரை காட்சி
  • Autofocus 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • வீடியோ காலிங் செய்ய முன் கேமரா
  • Multiformat வீடியோ / ஆடியோ பிளேயர்
  • எஃப்எம் ரேடியோ
  • ராம்: 1/2GB
  • உள் நினைவகம்: 8/16/32GB உள்ளக நினைவகம்
  • விரிவாக்க கூடிய மைக்ரோ அட்டை துளை
  • ப்ளூடூத்
  • Wi-Fi
  • 3G
  • microUSB

இந்தியாவில் HTC M7 விலை: Rs.38, 000 வரை இருக்கலாம்

Read this article in English

Saturday, December 8, 2012

அறிந்ததும் அறியாததும்: பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா?






நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!!!

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம்

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற் சொத்தை

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

உடையாத திரையுடன் வரப்போகிறதா சாம்சங் கேலக்ஸி S4?



சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4யை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதாகவும் இதன் திரை உடயாததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் கேலக்ஸி S4 என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிறுவனதிலிருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையிலேயே கேலக்ஸி S4 மிகவும் பிரபலமடைந்துள்ளது.

தற்பொழுது தயாரிப்பு நிலையிலுள்ள இந்த அடுத்ததலைமுறை தொழில்நுட்பம்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுமென தெரிகிறது.
அதேபோல் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட் போன் கண்ணாடி மற்றும் பாலிமர் ஆகியவை கொண்ட கலவையால் செய்யப்படும் உடையாத திரையுடன் வெளிவரப்போவதாக கூறுகின்றன.


இதன் சில விவரக்குறிப்புகள் ,
  • 2 GHZ குவாட் கோர் ப்ராசசெர்
  • 5″ பெரிய திரை,
  • 1080 பிக்செல் ரெசுலூசன்,
  • 13எம்பி கேமரா,
  • 2ஜிபி ரேம்.
விலையைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.

Thursday, December 6, 2012

சோனி Xperia E ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மற்றும் விவரக்குறிப்புகள்




சோனி Xperia E ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:


  • 1GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் பிராசசர்
  • அண்ட்ராய்டு v4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஓஎஸ்
  • 3.5 "அங்குல HVGA டிஎஃப்டி தொடுதிரை காட்சி
  • திரை தெளிவுத்திறன்: 320 x 480 பிக்சல்கள்
  • ஆட்டோ ஃபோகஸ் மூலம் 3.2 மெகாபிக்சல் கேமரா
  • ரேம்: 512MB
  • உள் சேமிப்பு: 4GB
  • விஸ்தரிக்கலாம் நினைவகம்: 32 ஜிபி வரை வரை
  • ப்ளூடூத்
  • Wi-Fi
  • மைக்ரோ USB v2.0
  • DLNA
  • 1500mAh லி அயன் பேட்டரி
  • Talktime: ஒரு வரை 6.3 மணி
  • காத்திரு நேரம்: 530 மணி வரை
  • பல வடிவமைப்பு ஆடியோ / வீடியோ பிளேயர்
  • எஃப்எம் ரேடியோ
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • பரிமாணங்கள்: 113.5 x 61,8 x 11.0 மிமீ
  • எடை: 115,7 கிராம்

இந்தியாவில் சோனி Xperia E விலை: விரைவில் 

Read This Article in English
Related Posts Plugin for WordPress, Blogger...