Friday, December 28, 2012

நல்லொழுக்கம் பேணுங்கள்* அடக்கம் இல்லாமல் ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்ந்தவனுடைய வாழ்வு சிறப்பு உடையதாகும்.

* அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்பவனின் துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் ஒட்டாமல் விலகி ஓடுவதைப் போல் அவனை விட்டு அகலும்.

* வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல நீ அரண் செய்து கொள், ஊக்கமும் அறிவும் உடையவனாய் இரு.

மாசுக்கள் அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம். அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.

* வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் நான்கு பயன்களும் அதிகரிக்கும்.

* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காப்பதுடன், உடலை அடக்கப் பழக வேண்டும். தீய ஒழுக்கத்தை ஒழித்து நல்ல ஒழுக்கத்தையும் பேணி காக்க வேண்டும்.

* வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதைக்கண்டு மிரளத் தேவையில்லை.

- புத்தர் 

Wednesday, December 26, 2012

உங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா?குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள். 

மேலும் சில குழந்தைகள் 2 வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும். இப்போது அந்த மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போமா!!! 


* குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும் பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள் புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க, அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச வேண்டும். 

* ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது, அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த பயமுமின்றி பேசுவார்கள்.

* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.

Monday, December 24, 2012

இட்லி பற்றி சில தகவல்கள் தெரிந்து கொளுங்கள்
இட்லி என்றால் என்ன...? 

நண்பர்களே இட்லி க்கு தமிழ் பெயர் என்னனு தெரியுமா.? - பெயர்க்காரணம், விளக்கம் தெரிஞ்சுக்கோங்கப்பா...

இட்டவி(இட்டு+அவி).இட்டவியே காலபோக்கில் மருவி இட்லி ஆகிவிட்டதாக கூறுவா்.

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு.பண்டம்
இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது.
தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு.
இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது
. வெண்மையான நிறத்தில் இருக்கும்.
அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது
இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து
மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

 • சட்னி
 • சாம்பார்
 • மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி
 • சர்க்கரை
 • தயிர்

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு ஆகும்.

எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.

செய்முறை

தேவையான பொரு
ட்கள் :
 • புழுங்கல் அரிசி - 400 கிராம்
 • உளுத்தம் பருப்பு - 100 கிராம்
 • உப்பு - தேவையான அளவு

ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.

அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.

அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும். பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.

இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.

புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.

இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

குழந்தைகளை தைரியமாக இருக்கச்செய்வது எப்படி?
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு 'பூச்சாண்டி' காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.

 ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

 2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

 3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

 4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

 6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

 8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

 இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, December 22, 2012

கணித மேதை இராமானுஜம் - 125 வது பிறந்தநாள்


கணித மேதை இராமானுஜம் - 125 வது பிறந்தநாள்
இராமானுஜம்

வீட்டிற்கு முன்பு பெண்கள் போடும் கோலம் முதல் வானில் சுற்றித்திரியும் கோளங்கள் வரை எல்லாமே ஒருவித கணக்கில் தான் இயங்கிங்கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதம் என்பது பெரும் துயரம் என்பதை நாம் உணர்வோம். அவர்களுக்கு ஆசிரியர் சொல்லும் ஒரே அறிவுரை, "கணிதத்தை காதலி... விரைவில் முடிக்கலாம் என.."

எனவே அந்த வகையில் உலகத்தை கணிதம் மூலமாக புரட்டிப்போட்டவர்கள் மூவரே.
1. லியோனார்டு ஆய்லர் (1707-1783), 
2. கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851),
3.பிரமாண ஆத்தில் பிறந்த சீனிவாச இராமானுஜன்(டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920).

இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினமான டிசம்பர் 22 "தேசிய கணித தினமாக" கடைபிடிக்கப்படும் என கடந்தாண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். எனவே நாம் பூஜ்ய தேசத்தவர்கள் என சொல்லிக் கொள்ளலாம். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. பின்னர் 20ம் நூற்றாண்டில் இராமானுஜன் மூலம் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.

பிறப்பு மற்றும் வாழ்க்கை

இவர் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தமிழக மாநிலத்தில் ஈரோட்டில் பிறந்தார். 2வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார்.

விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்ற போது மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேனேஜர் எஸ்.என்.அய்யர், இராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை. இருப்பினும், 1913ல் ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அனுப்பினார்.

அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று 1914ம் ஆண்டு பிரித்தானியா சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. இராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் பிரித்தானியா வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு 1917ல் இந்தியா திரும்பினார். பின்னர் இரண்டு, மூன்று வருடங்கள் வாழ்ந்த கணிதமேதை இராமானுஜம் 1920ல் மறைந்தார்.

Wednesday, December 19, 2012

அறிந்ததும் அறியாததும்: உப்புஅதிகம் சாப்பிடும்பழக்கத்தை எப்படிதவிர்ப்பது?

உப்புஅதிகம் சாப்பிடும்பழக்கத்தை எப்படிதவிர்ப்பது?
உப்புஅதிகம் சாப்பிடும்பழக்கத்தை எப்படிதவிர்ப்பது?

பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும். இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


அதிலும் நீண்ட நாட்கள் உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருந்தால், உதட்டில் வெடிப்பு, அதனால் இரத்தம் வடிதல், மயக்கம் போன்றவை சில அறிகுறிகளாகும். இந்த சோடியத்தின் அளவு உடலில் நீடித்தால், சில சமயம் மரணத்தில் கூட முடிந்துவிடும். எனவே, உணவு முறையில் உப்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்போது எப்படி உப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது என்று பார்ப்போமா!!!


1. சமைத்த உணவின் இயற்கையான சுவையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். கரண்டியை எடுக்கும் முன்பே உப்புப் பெட்டியை எடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால், உப்பில்லாமல் ஒரு உணவின் இயற்கையான ருசியை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உப்பில்லாத உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும். சுவையில்லை, சப்பென்றிருக்கிறது என்னும் அலுப்பு மனதில் தோன்றினாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உணவில் இயற்கையான சுவையை தெரிந்து கொள்ளலாம். இதனால் உப்பு வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிட முடியும்.


2. கடைகளில் விற்கும் விருப்பமான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் போது, அதன் விபரப்பட்டியலில் உள்ள சோடியத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும். மேலும் இதனால் இனிமேல் இந்த உணவுப் பொருட்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


3. உப்பின் அளவைக் குறைக்க நினைக்கும் போது சமையலில் உப்பின் அளவானது அதிகரிக்காமல் இருக்க, சமைக்கும் போதே உப்பை அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால், பாதி உப்பு போடுவது நல்லது. மிகவும் குறைவாக இருந்தால், சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் சமைக்கும் போது போட்ட உப்பின் அளவே சரியானதாக இருக்கும்.


4. உப்புக்கு பதிலாக இதர சீசனிங் முறைகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது ஒரு மிகச்சிறந்தது. ஏனெனில் தற்போது பலவிதமான சுவையூட்டும் உணவுப் பொருட்கள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே உப்பை தவிர்க்கலாம். அவை: மூலிகை வகைகள், மசாலா வகைகள், எலுமிச்சை, பூண்டு, வெஜிடேபிள் உப்பு, சாஸ் போன்றவை.


5. பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். புதிதான இறைச்சி, புதிதான நன்னீர் மீன்வகைகள் ஆகியவற்றில் உப்புக் குறைவான அளவில் உள்ளன. ஆனால் ரெஸ்டாரெண்ட் உணவுகளான சூப் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுப்பண்டங்கள் எல்லாவற்றிலும் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. மேலும் எப்போது எந்த பொருளை வாங்கினாலும், அதில் உள்ள லேபிளில் குறிப்பிட்டிருக்கும் சோடியத்தின் அளவைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


6. உப்பு தூவிய தின்பண்டங்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பை துடைத்து விட்டு சாப்பிட வேண்டும். அதிலும் பிஸ்கட்டுகளில் ‘அன்சால்ட்டட் டாப்' வகைகளை விட ‘சால்ட்டட் டாப்' வகைகளே மேல். ஏனெனில் அன்சால்ட்டட் டாப் வகைகளில், அதன் உள்ளேயே உப்பின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சால்ட்டட் டாப் வகைகளின் மேல் மட்டும் தான் உப்பு தடவப்பட்டிருக்கும். ஆகவே அவற்றை துடைத்துவிட்டு சாப்பிடலாம். அதனுள்ளே சுவையைத் தரும் உப்பு இல்லையென்றாலும், மேலே கொஞ்சம் ஒட்டியிருக்கும் உப்பே போதுமானது.


7. ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டால், உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கவே முடியாது. எனவே வெளி சாப்பாட்டை விட, வீட்டு சாப்பாட்டினால், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கலாம்.

Tuesday, December 11, 2012

குறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்கள்அறிவியலின் முன்னேற்றத்தைப் பார்த்தால் வியப்படயத்தான் வைக்கிறது. பெல்ஜியம் நகரிலுள்ள க்ஹென்ட் என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்த குறுஞ்செய்திகளைத் திரையிடும் கான்டாக்ட் லென்ஸ்களைக் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த கான்டாக்ட் லென்ஸ்கள் வட்டவடிவிலான LCD அமைப்பிலிருக்கும். இந்த LCD அமைப்பானது புகைப்படங்களைக்கூட இணைப்பில்லாக் கருவியின் மூலம் திரயிடக்கூடியது.

இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால் அதில் சில புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.

“தொழில்நுட்பம் நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டும், மெருகேரிக்கொண்டும் வரும் நிலையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம்” என ஹெர்பர்ட் டி ஸ்மெட் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது, இந்தத் தொழில்நுட்பம் தரத்தை முன்னிறுத்துகிறது. அதாவது, கணிப்பொறித் திரையில் பார்ப்பதைப் போன்று இருக்கவேண்டுமென்பதே. கண்டிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் இதை உண்மையாக்குகிறது என்பதே சொல்லலாம். எப்படியெனில், இதிலும் இணைப்பில்லா கருவிவரை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம்.
இதற்கான வர்த்தக அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Karbonn ஸ்மார்ட் Tab 7 டொர்னாடோ விவரக்குறிப்புகள் மற்றும் விலை இந்தியாவில்


Karbonn ஸ்மார்ட் Tab 7 டொர்னாடோ விவரக்குறிப்புகள்:


 • 1.2 GHz Cortex A9 பிராசசர்
 • அண்ட்ராய்டு v4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஓஎஸ்
 • 7.0 "அங்குல TFT LCD கொள்ளளவு தொடுதிரை காட்சி
 • திரை தெளிவுத்திறன்: 800 x 480 பிக்சல்கள்
 • வீடியோ காலிங் 2 மெகாபிக்சல் முன்னணி கேமரா
 • மைக்ரோ அட்டை துளை கொண்ட வரை 32 ஜிபி வரை
 • Multiformat வீடியோ / ஆடியோ பிளேயர்
 • எஃப்எம் ரேடியோ
 • 3.5mm ஆடியோ ஜாக்
 • Wi-Fi
 • 3G USB டாங்கிள்
 • USB v2.0
 • 3700 mAh லி அயன் பேட்டரி

Karbonn ஸ்மார்ட் Tab 7 டொர்னாடோ விலை: ரூ .5, 500

Read This article in english

HTC M7 மொபைல் அம்சங்கள், விவரக்குறிப்புகள் & விலை இந்தியாவில்


HTC M7 அம்சங்கள் & விவரக்குறிப்புகள்:
 • Qualcom ஸ்னாப்ட்ராகன் S4, ப்ரோ Quad-core பிராசசர்
 • 5 அங்குல HD கொள்ளளவு தொடுதிரை காட்சி
 • Autofocus 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
 • வீடியோ காலிங் செய்ய முன் கேமரா
 • Multiformat வீடியோ / ஆடியோ பிளேயர்
 • எஃப்எம் ரேடியோ
 • ராம்: 1/2GB
 • உள் நினைவகம்: 8/16/32GB உள்ளக நினைவகம்
 • விரிவாக்க கூடிய மைக்ரோ அட்டை துளை
 • ப்ளூடூத்
 • Wi-Fi
 • 3G
 • microUSB

இந்தியாவில் HTC M7 விலை: Rs.38, 000 வரை இருக்கலாம்

Read this article in English

Saturday, December 8, 2012

அறிந்ததும் அறியாததும்: பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா?


நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!!!

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம்

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற் சொத்தை

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

உடையாத திரையுடன் வரப்போகிறதா சாம்சங் கேலக்ஸி S4?சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4யை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதாகவும் இதன் திரை உடயாததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் கேலக்ஸி S4 என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிறுவனதிலிருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையிலேயே கேலக்ஸி S4 மிகவும் பிரபலமடைந்துள்ளது.

தற்பொழுது தயாரிப்பு நிலையிலுள்ள இந்த அடுத்ததலைமுறை தொழில்நுட்பம்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுமென தெரிகிறது.
அதேபோல் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட் போன் கண்ணாடி மற்றும் பாலிமர் ஆகியவை கொண்ட கலவையால் செய்யப்படும் உடையாத திரையுடன் வெளிவரப்போவதாக கூறுகின்றன.


இதன் சில விவரக்குறிப்புகள் ,
 • 2 GHZ குவாட் கோர் ப்ராசசெர்
 • 5″ பெரிய திரை,
 • 1080 பிக்செல் ரெசுலூசன்,
 • 13எம்பி கேமரா,
 • 2ஜிபி ரேம்.
விலையைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.

Thursday, December 6, 2012

சோனி Xperia E ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மற்றும் விவரக்குறிப்புகள்
சோனி Xperia E ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:


 • 1GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் பிராசசர்
 • அண்ட்ராய்டு v4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஓஎஸ்
 • 3.5 "அங்குல HVGA டிஎஃப்டி தொடுதிரை காட்சி
 • திரை தெளிவுத்திறன்: 320 x 480 பிக்சல்கள்
 • ஆட்டோ ஃபோகஸ் மூலம் 3.2 மெகாபிக்சல் கேமரா
 • ரேம்: 512MB
 • உள் சேமிப்பு: 4GB
 • விஸ்தரிக்கலாம் நினைவகம்: 32 ஜிபி வரை வரை
 • ப்ளூடூத்
 • Wi-Fi
 • மைக்ரோ USB v2.0
 • DLNA
 • 1500mAh லி அயன் பேட்டரி
 • Talktime: ஒரு வரை 6.3 மணி
 • காத்திரு நேரம்: 530 மணி வரை
 • பல வடிவமைப்பு ஆடியோ / வீடியோ பிளேயர்
 • எஃப்எம் ரேடியோ
 • 3.5mm ஆடியோ ஜாக்
 • பரிமாணங்கள்: 113.5 x 61,8 x 11.0 மிமீ
 • எடை: 115,7 கிராம்

இந்தியாவில் சோனி Xperia E விலை: விரைவில் 

Read This Article in English

சோனி Xperia மின் இரட்டை விலை இந்தியாவில் மற்றும் விவரக்குறிப்புகள்

சோனி Xperia E இரட்டை அம்சங்கள் & விவரக்குறிப்புகள்:

1GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் MSM7227A பிராசசர்
அண்ட்ராய்டு v4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஓஎஸ்
3.5 "அங்குல HVGA டிஎஃப்டி தொடுதிரை காட்சி
திரை தீர்மானம்: 320 x 480 பிக்சல்கள்
ரேம்: 512MB
உள் சேமிப்பு: 4GB
விஸ்தரிக்கலாம் நினைவகம்: 32 ஜிபி வரை வரை
கேமரா: ஆட்டோ ஃபோகஸ் மூலம் 3.2 மெகாபிக்சல் கேமரா
பல வடிவமைப்பு ஆடியோ / வீடியோ பிளேயர்
எஃப்எம் ரேடியோ
Wi-Fi
மைக்ரோ USB v2.0
ப்ளூடூத்
DLNA
3.5mm ஆடியோ ஜாக்
சமூக வலையமைப்பு பயன்பாடுகள்: பேஸ்புக், ட்விட்டர்
1500mAh லி அயன் பேட்டரி
Talktime: 6 வரை மணி 12 நிமிடங்கள்
காத்திரு நேரம்: 530 வரை நேரங்கள்
பரிமாணங்கள்: 113.5 x 61,8 x 11.0 மிமீ
எடை: 115,7 கிராம்
நிறங்கள்: பிளாக், தங்கம்

இந்தியாவில் சோனி Xperia மின் இரட்டை விலை: Rs.30, 000 வரை 

Read This Article in English

Tuesday, December 4, 2012

Karbonn A15 விலை மற்றும் விவரக்குறிப்புகள் இந்தியாவில்


கார்பன் மொபைல் நிறுவவனம் இன்று ஒரு புதிய மாடலை வெளியிட்டது. Karbonn A15 மொபைல் விவரங்களை பற்றி பார்போம்.


Karbonn A15 விவரக்குறிப்புகள்:


 • இரட்டை சிம்
 • 1GHz அல்ட்ரா பாஸ்ட் பிராசசர்
 • அண்ட்ராய்டு v4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஓஎஸ்
 • 4.0 "அங்குல WVGA TFT LCD கொள்ளளவு தொடுதிரை காட்சி
 • திரை தெளிவுத்திறன்: 800 x 480 பிக்சல்கள்
 • LED ஃப்ளாஷ் கொண்ட 3 மெகா பிக்சல் கேமரா
 • வரை 32 ஜிபி வரை விரிவாக்க நினைவகம்
 • பல வடிவமைப்பு வீடியோ / ஆடியோ பிளேயர்
 • எஃப்எம் ரேடியோ
 • 3G
 • சமூக வலையமைப்பு பயன்பாடுகள்: பேஸ்புக், ட்விட்டர், Picasa, Flickr Google Play இல், gtalk, WhatsApp
 • Wi-Fi
 • ப்ளூடூத்
 • USB v2.0
 • 3.5mm ஆடியோ ஜாக்
 • ஜிபிஎஸ்
 • 1420mAh லி அயன் பேட்டரி
 • நிறங்கள்: பிளாக்


இந்தியாவில் Karbonn A15 விலை: Rs.6000
Related Posts Plugin for WordPress, Blogger...