Saturday, December 8, 2012

உடையாத திரையுடன் வரப்போகிறதா சாம்சங் கேலக்ஸி S4?



சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4யை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதாகவும் இதன் திரை உடயாததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் கேலக்ஸி S4 என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிறுவனதிலிருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையிலேயே கேலக்ஸி S4 மிகவும் பிரபலமடைந்துள்ளது.

தற்பொழுது தயாரிப்பு நிலையிலுள்ள இந்த அடுத்ததலைமுறை தொழில்நுட்பம்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுமென தெரிகிறது.
அதேபோல் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட் போன் கண்ணாடி மற்றும் பாலிமர் ஆகியவை கொண்ட கலவையால் செய்யப்படும் உடையாத திரையுடன் வெளிவரப்போவதாக கூறுகின்றன.


இதன் சில விவரக்குறிப்புகள் ,
  • 2 GHZ குவாட் கோர் ப்ராசசெர்
  • 5″ பெரிய திரை,
  • 1080 பிக்செல் ரெசுலூசன்,
  • 13எம்பி கேமரா,
  • 2ஜிபி ரேம்.
விலையைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...