Saturday, January 12, 2013

வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்



இதுவரை வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என பலவாறு யோசித்திருப்போம். ஆனால் வீட்டில் அழகான பெயிண்டிங் அல்லது இயற்கைக் காட்சிப் படங்களை மாட்டுவதன் மூலமும், வீட்டை அலங்கரிக்கலாம் என்ற யோசனை சிலருக்கு இருக்காது. 
இந்த மாதிரியான படங்களை வீட்டில் மாட்டுவதால், வீடு பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, நம்மை சூழ்ந்திருக்கும் சூழ்நிலையானது அழகாக இருந்தால், அவை மனதிற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். சொல்லப்போனால், படங்களை நேராக சுவற்றில் மாட்டுவதும் ஒரு வகையான கலை. அதில் ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. ஆனால் அதை எப்படி மாட்டுவது என்பதற்கு இதோ சில வழிமுறைகள் உள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டை அழகான படங்களால் அலங்கரியுங்கள். 
* சுவற்றில் படங்களை மாட்டுவதற்கு முன்னர், எந்த இடத்தில் மாட்டினால் அழகாக இருக்கும் என்று முடிவு எடுக்க வேண்டும். அதற்கு சில நேரம் செலவழித்து, நன்கு யோசித்து, அறையின் சூழல் மற்றும் லைட்டிங்கை பொருத்து அழகான படத்தை தேர்வு செய்யவும். பின் உதவிக்கு ஒருவரை வைத்து கொண்டு, படத்தை மாட்டும் இடத்தில் பென்சிலால் மார்க் செய்து கொள்ள வேண்டும். மேலும் அந்த படமானது, நமது கண்கள் பார்க்க ஒரு அடிக்கு மேல் என்ற கணக்கில் இருந்தால், அது அதிக அழகை கூட்டும்.

 * படங்களை மத்திய பகுதியில் வைப்பது சிறந்தது. அதை சரியாக மாட்ட கடினம் என கருதினால், அளக்கும் டேப் கொண்டு படத்தை மாட்டும் இடத்திற்கு மேல் மற்றும் கீழ் அளவுகளை அளந்து கொண்டால் எளிதாக இருக்கும். முக்கியமாக படத்தின் அளவையும் அளந்து கொள்வது சரியாக இருக்கும். * சரியான இடத்தை தேர்ந்தெடுத்து, அளவு செய்த பின் மார்க் செய்த இடத்தில் ஒரு ஓட்டை செய்ய வேண்டும். அதற்கு சுத்தி கொண்டோ அல்லது ட்ரில்லிங் மெசின் கொண்டோ ஓட்டை போடவும். சுவற்றில் துளை போடும் பொழுது, ஆணியின் அளவு மட்டும் துளை போடுவது நல்லது.

 * படங்களை மாட்ட ஏற்ற ஆணிகளை எடுக்கும் போது, அந்த ஆணி அந்த படத்தை தாங்க தக்கவாறு தேர்ந்தெடுத்தல் அவசியம்.

 * படங்களை மாட்டுவதற்கு தேர்ந்தெடுக்கும் போது, எந்த இடத்தில் எந்த படத்தை வைத்தால் சரியாக இருக்கும் என்று நன்கு கணித்து, பின் மாட்ட வேண்டும். படங்களானது, குழந்தைகள், குடும்ப படங்கள் அல்லது கையால் வரைந்த படங்கள் என்று இருந்தால் சரியாக இருக்கும். ஏனெனில் சில படங்கள் அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது. உதாரணமாக சாமி படங்கள் அனைத்து இடங்களிலும் வைக்க முடியாது. எனவே அனைத்தையும் சரி பார்த்து, பின் பொருத்த வேண்டும்.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...