Tuesday, September 4, 2012

ஆசிரியர் தினம் பற்றிய சில தகவல்கள் - ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

டாக்டர்.ராதா கிருஷ்ணன் 



டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினத்தை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் ஆனால் அது எப்படி வந்தது என்று யோசித்து உண்டா? 

நிறைய நண்பர்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் இருந்தாலும் எனக்கு தெரிந்த தகவலை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

ஆசிரியர் தினம் என்பது மாணவர்களும் ஆசிரியர்களும் ஆடி பாடி கொண்டாடி மகிழ்கின்ற நாள். மாணவர்கள் ஆசிரியர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் ஆசிரியர்களை மகிழ்விக்க பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 

ஆசிரியர் தினம் எப்படி வந்தது?

சில மாணவர்கள் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களை சந்தித்து உங்களுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் என்னுடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் நான் மிகவும் மகிழ்வேன் என்றார் அதானால் அவருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டபடுகிறது. 

டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவருடைய பிறந்த தினம் 1962 செப்டெம்பர் 5 முதல் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த நாளில் தன்னுடைய ஆசிரியர் பணியை சிறப்பாக செய்ததை நினைத்து மனம் மகிழ்வர். மற்றும் சிறப்பான ஆசிரியர்கள் பாரட்டபடுவார்கள்.


ஆசிரியர் தின சிறப்பு கவிதை - ஆசிரியர்

******************************************************************

Tags: ஆசிரியர் தினம், டாக்டர்.ராதா கிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினம் சிறப்பு செய்திகள், ஆசிரியர் தினம் வாழ்த்து, ஆசிரியர் பற்றிய செய்திகள். 


No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...