Tuesday, August 28, 2012

அதிர்ச்சியை தரும் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்.


கட்டிடம் கட்டுவதற்கு அடிப்படை சரியாக இருக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு கல்வி என்பது ஒரு வீட்டுக்கு சமமாகும். அப்பேற்பட்ட கல்வி தரமானதாகவும் அதை கற்பிக்கும் ஆசிரியர் சிறந்த ஒருவராக இருந்தால் மட்டுமே கல்வியின் தரமும் அதை கற்கும் மாணவரின் தரமும் உயரும்.

ஆனால் அடிப்படையை, வாழ்க்கையின் அடிப்படையை நன்றாக கற்று தரக்கூடிய ஆசிரியரின் நிலையை அண்மைய தகுதி தேர்வு முடிவுகள் பார்க்கும பொழுது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் தகுதியின்றி இருக்கலாமா? இப்பொழுது வெளி வந்திருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை பார்க்கும்  பொழுது அப்படி தான் தோன்றுகிறது. இது வரை வந்த ஆசிரியர்களின் தகுதி கேள்விகுறியாய் நிற்கிறது.

ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தகுதி தேர்வில் ௦.5 சதவிகிதம் அளவுக்கு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதை பார்க்கும் பொழுது ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் கல்லூரிகளும் தரமாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

இப்பொழுதாவது அரசு கொண்டு வந்த தகுதி தேர்வால் நம்முடைய இளைய தலைமுறையினர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இளைய தலைமுறைக்கு சிறப்பான கல்வி வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த இந்த முடிவை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு தேர்வு எழுத நேரம் போதவில்லை, பாட திட்டத்தை தாண்டி கேள்வி கேட்கிறார்கள் என்றெல்லாம் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வை குறை கூறுகிறார்கள் இது முற்றிலும் தவறானது ஏன் என்றால் 2448 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் அவர்களை போல் நாமும் கடுமையாக போராடி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...