Monday, September 3, 2012

டாக்டர்.ராதா கிருஷ்ணன் பற்றிய சில தகவல்கள்

நானும் ஆசிரியர் என்பதால் இப்பதிவை எழுதுவதில் பெருமிதம் அடைகிறேன்.  நம் அனைவருக்கும் டாக்டர்.ராதா கிருஷ்ணன் என்றால் நினைவுக்கு வருவது அவர் ஒரு சிறந்த ஆசிரியர், முன்னால் குடியரசு தலைவர், அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது இன்னும் பல..

டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் 1888 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். அவர் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் திருத்தணி ஊரில் பிறந்தார். தற்பொழுது இது தமிழ் நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.

டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் தத்துவம் பற்றி விரிவாக பயின்றார். அவருடைய கல்வி முடிந்ததும் Madras Presidency College கல்லூரியில்  Department of Philosophyல் விரிவுரையாளராக ஆசிரியர் பணியை தொடங்கினார்.

தொடர்ந்து பல கல்லூரிகளில் ஆசிரியர் பணியை செம்மையாக செய்தவர்  டாக்டர்.ராதா கிருஷ்ணன் தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர்.

டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள் ஐந்து முறை நோபல் பரிசுக்காக தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.

டாக்டர்.ராதா கிருஷ்ணன் இந்தியாவின் துணை குடியரசு தலைவராக இருந்தார் (1952 -1962)


டாக்டர்.ராதா கிருஷ்ணன் இந்தியாவின் குடியரசு தலைவராக (13 May 1962 – 13 May 1967 ) இருந்தார்.

டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாப்படுகிறது. அவர் ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குகிறார். ஆசிரியர் பணியை மிகவும் சிறப்பாக செய்தவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்கள். 

3 comments:

  1. Please change the DOB of Dr. Radha Krishnan sir,

    ReplyDelete
  2. Please Check the DOB of Dr. RadhaKrishnan sir, don't post wrong message...,

    ReplyDelete
    Replies
    1. தவறான தகவலுக்கு மன்னிக்கவும்........ தவறு சரி செய்யப்பட்டது..

      நன்றி நண்பரே.............

      Delete

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...